
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.நகரங்களைத் தொடர்ந்து தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
‘இ-பதிவு’ முறையை பதிவு செய்வது எப்படி ?
*இ-பதிவு’ செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையத்தளத்தில் செல்ல வேண்டும்.இதில் தங்களுடைய செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும் மேலும் அதில் இடம்பெற்றிருக்கும் ‘கேப்ட்சா’ எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
*தாங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் ஓ.டி.பி.(OTP) எண் வரும். இந்த எண்ணை பதிவு செய்த பின் ‘இ-பதிவு’ க்கான காலம் திறக்கப்படும் .
*பின்னர் இதில் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், வாகன எண், எங்கிருந்து எங்கே பயணம், எதற்காக பயணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். அதாவது,பயணிப்பதற்கான காரணம், அதற்கான அடையாள அட்டை மற்றும் பயணிக்கும் வாகனம் எது என்பதை குறிப்பிட வேண்டும்.
பயணிப்பதற்கான காரணம் :
*மருத்துவக் காரணம்/
*திருமணம் (இ-பதிவு பிரிவிலிருந்து திருமணம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது)
*இறப்பு/ முதியோர் பராமரிப்பு
இதில் ஏதேனும் ஒரு காரணத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடையாள அட்டை:
*குடும்ப அட்டை
*ஆதார் கார்ட்
*பான் கார்ட்
*ஓட்டுநர் உரிமம்
இதில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்தல் வேண்டும்.
பயணிக்கும் வாகனம் :
*கார்
*இருசக்கர வாகனம் ,
*வாடகை டாக்ஸி ,ஆட்டோ
இதில் ஏதேனும் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.மேலும் ,எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்தல் வேண்டும்.
அடுத்த நிலையாக நீங்கள் எங்கிருந்து புறப்படுகிறீர்கள் மற்றும் எங்கு செல்கிறீர்கள் என்று முழு விவரத்தையும் அளித்தல் வேண்டும்.இறுதியாக பயணிகளின் பெயர், ஓட்டுநரின் பெயர், ஓட்டுநரின் கைப்பேசி எண் ஆகியவற்றை அளித்தல் வேண்டும்.