
ஜிகா வைரஸானது ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் இரவு நேரங்களை விட, பகல் நேரத்தில்தான் மக்களைக் கடிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் பரவியவரின் ரத்தத்தை வேறு நபர்களுக்கு செலுத்துவது மூலம் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவும் இந்த வைரஸ் பரவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணியின் மூலம், அவரது வயிற்றில் வளரும் சிசுவுக்கும் ஜிகா வைரஸ் பரவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜிகா வைரஸின் அறிகுறிகளும், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் அறிகுறிகளும் ஒன்றாகவே இருக்கும். ஜிகா நோய் பாதித்த ஒருவரின் ரத்த அல்லது சிறுநீரக மாதிரியை ஆய்வு செய்தே பின்னரே ஜிகா வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன ?
ஜிகா வைரஸ் தொற்றால் ஒருவருக்கு இருக்கும்போது,அவருக்கு ஒரு சில நாள்கள் முதல் ஒரு வாரத்துக்குள் அறிகுறிகள் தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டவருக்கு காய்ச்சல், தசை வலி, சரும பாதிப்பு, தலைவலி, மூட்டு வலி, சிவந்த கண்கள் போன்ற பொதுவான உடல் நலப் பிரச்னைகளே இந்த ஜிகா வைரஸின் அறிகுறிகளாக உள்ளன.
*ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை தாக்கும் போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மைக்ரோஃபாலி போன்ற பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்க நேரிடும்.