உடலுக்கு நன்மையை தரும் காலை உணவுகள் என்னென்ன ? காலை உணவுகளால் ஏற்படும் நன்மைகள் என்ன ?

வெதுவெதுப்பான நீர் ,தேன் மற்றும் எலுமிச்சை சாறு

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பல . இது ஜீரண சக்தியை உடலில் சீராக வைத்திருக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

பேரிச்சை :

பேரிச்சை உடலுக்கு நல்ல வலிமையை தரக்கூடியது .உடலின் செரிமானத்தை சீராக வைத்திருக்கும் . மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய வல்லது . பொட்டாசியம் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது.

பாதாம் பருப்பு :

தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் .பாதாமில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் இது நம் உடலுக்கு நல்ல வலிமையை தரவல்லது .நாள் முழுவதும் பாதம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நமக்கு கிடைத்து விடுகிறது .

நெல்லிக்காய் :

நாள்தோறும் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு ,நீண்ட ஆயுளையும் தர வல்லது .நெல்லிக்காய் ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது .நெல்லிக்காயில் உள்ள அல்கலைன் ஆனது ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்ய உதவுகிறது .

பப்பாளி :

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பப்பாளி சிறந்து விளங்குகிறது . உடல் உறுப்புகள் சீராக இயங்க பப்பாளி உதவுகிறது . பப்பாளி சாப்பிட்டால் 1 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.பப்பாளி பழத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளன .

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு - காலியிடங்கள்: 535

Wed Sep 23 , 2020
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.இத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் தகுதி உடையவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலியிடங்கள்: 535 01.Manager (Risk) MMGS-II – 16002. Manager(Credit) MMGS-II – 20003. Manager(Treasury) MMGS-II – 3004. Manager (Law) MMGS-II – 2505. Manager (Architect) MMGS-II – 0206. […]
punjab-bank-jobs-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய