கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்..

இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.இந்தியாவில் பல மாநிலங்களில் கதொற்றானது அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது பொதுத்தேர்வு எழுதும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.மேலும் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதன் காரணமாக ,பள்ளி கல்வித்துறை சார்பில் கீழ்கண்ட நெறிமுறைகள் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரையும் சமூக இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும் .அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும்பட்சத்தில் அதற்கான வழிமுறை கண்டறிந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2.அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

3.பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

4.அனைத்து வகுப்புகளிலும் கை சுத்திகரிப்பான் ( சானிடைசர் ) கண்டிப்பாக இருக்க வேண்டும். குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தல் வேண்டும்.குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்களா என ஆசிரியர்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்

5.வகுப்பு அறைகளுக்குள் வகுப்பு ஆசிரியர்கள் , உள்ளே நுழையும் போதும் , வெளியே வரும் போதும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டு வெளியே வருவதை தவிர்த்து , சமூக இடைவேளியுடன் செல்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

6.விளையாட்டுத் திடலிலும் மாணவர்கள் தக்க பாதுகாப்புடன் விளையாடுவதை உடற்கல்வி ஆசிரியர் உடன் இருந்து அதை கண்காணித்து அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

7.அரசு பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்லும் போது வாகனங்களில் கைசுத்திகரிப்பான் வைத்திருக்க வேண்டும் .ஓட்டுநர் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

8.மதிய உணவு உட்கொள்ளும்போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து சற்றே இடைவெளிவிட்டு தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்வதை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.

9.மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அதற்கு ஏற்றார்போல் மதிய உணவிற்கான நேரங்களை மாற்றி அமைத்து , இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பின்பற்றுவதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

10.ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட விபர அட்டைகள் வைத்திருக்க வேண்டும்.

11.கழிவறைக்கு செல்லும் போதும் , வரும்போது இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

12.வகுப்பு அறை ஜன்னல் கம்பிகள் , கதவுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மற்றும் இடங்களில் கிருமிநாசினியை தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

13.ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அவசர காலத்திற்கான தொலைபேசி எண்கள் அடங்கிய பதாகைகள் அல்லது விபர அட்டைகள் தொங்கவிட வேண்டும்.

14.ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய நடைமுறைகளை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.பள்ளி கல்வித்துறை அலுவலர்கள்,ஆணையத் தலைவர் ஆகியோர் பள்ளிகளை திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் கண்டிப்பாக மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Next Post

கல்வித் தொலைக்காட்சி மூலம் மீண்டும் பாடங்கள் நடத்த உத்தரவு - பள்ளிக்கல்வித் துறை..

Tue Mar 30 , 2021
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது.இதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதில், 9 முதல் 11 வகுப்பு மாணர்வர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக 9 முதல் 11 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவரக்ளுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று […]
Education-tv-for-school-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய