கொரோனா தடுப்பூசி போடும் முன் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள்..

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ தெளிவாக விளக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி போடுவோருக்கும் சில வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

  • 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு பிறகு ஆபத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து அதிகரிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.
  • கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. மற்றவர்களைப் போலவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கிறது. பக்கவிளைவுகள் லேசானதுதான். லேசான காய்ச்சல் வரலாம். ஊசி செலுத்திய இடத்தில் வலி வரலாம். 3 நாட்கள் வரை பாதிப்பு இருக்கலாம்.
  • மிக அரிதாக 1.5 லட்சம் பேரில் ஒரு கர்ப்பிணிக்கு, தடுப்பூசி போட்ட 20 நாளில் சில முக்கிய அறிகுறிகள்( மூச்சு திணறல், வாந்தி, வயிற்று வலி, கைகால்களை அழுத்தும்போது வலி, மூட்டு வீக்கம், சருமத்தில் சிராய்ப்பு,தொடர் தலைவலி போன்றவை) இருக்கலாம். இதுகுறித்து அவர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் கொரோனா தாக்கினால், குழந்தையை பிரசவித்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்,அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Post

90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறியும் நவீன முகக்கவசம் ..

Wed Jun 30 , 2021
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக காத்துக்கொள்ள நாம் அனைவரும் முகக்கவசம் ,சமூக இடைவெளி மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடித்து வருகிறோம் . குறிப்பாக இதில் நாம் அனைவரும் மூலிகை முக கவசம், துணியால் ஆன முககவசங்கள், பிளாஸ்டிக் முககவசம் என பல வகை முகக்கவசங்களை அணிந்து வருகிறோம்.தற்போது தொழில்நுட்ப ரீதியான முககவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முககவசங்கள் உடன் வைபை(Wi -Fi), […]
New-sensor-mask
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய