பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மற்றும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி பலரும் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
வழிகாட்டு நெறிமுறைகள் :
- பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்கவும் , மற்றும் அதன் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , ” மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு ” அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre – CCC ) தெரியப்படுத்தவேண்டும் .
- புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
- மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு , பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். மேலும் படிக்க..

