
கூகுள் நிறுவனம் :
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது .
விளையாட்டு ,சூதாட்டம் தொடர்பான விதிமீறலின் அடிப்படையில் Paytm செயலி நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது .
Paytm நிறுவனம் :
வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கும் என Paytm நிறுவனம் உறுதி அளித்துள்ளது .
மேலும் ,மிக விரைவில் நாங்கள் மீண்டு வருவோம் எனவும் ,வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கும் எனவும் Paytm தனது Twitter பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
தற்காலிகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து புதிதாக செயலியை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் புதிய பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.