
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு,ஜூன் மாத இறுதியில் நுழுவுத் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 41 மத்திய பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக்கொள்கையின் படி மாணவர் சேர்க்கைகைக்கு பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுகள் மூலம் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த மத்திய பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம்.
இளநிலை, முதுகலை, மற்றும் முனைவர் படிப்புகள் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் அனைத்து படிப்புகளுக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தலாம் என்று நிபுணர் குழு(தேர்வுக் குழு) பரிந்துரைத்துள்ளது.
பொது நுழைவுத் தேர்வானது, குறிக்கோள் வகை மற்றும் விரிவான பதில் எழுதல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையியேலே மாணவர் சேர்க்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.