2022 முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தோ்வு..

நாடு முழுவதும் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொதுத் தகுதித் தோ்வு நடத்தப்படும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பாண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தோ்வு நடக்கவிருந்த நிலையில்,தற்போது தகுதித் தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

பொதுத் தகுதித் தேர்வானது ,மத்திய அரசுப் பணிக்கு இளைஞா்களைத் தோ்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்காகவும்,மேலும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த பொதுத் தகுதித் தேர்வு அமையும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பொதுத் தகுதித் தோ்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்சோ்ப்பு முகமை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே தோ்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆள்சோ்ப்பு தோ்வுகளுக்கு பதிலாக பொது தகுதி தோ்வை தேசிய ஆள்சோ்ப்பு முகமை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

Next Post

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் வெளியீடு ..

Wed Jul 7 , 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் கல்விக்கென புதிய திட்டங்களை வகுத்து அவற்றை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றுமாறு பள்ளி கல்வித்து துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகளை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது.., தமிழகத்தில் உள்ள […]
DPI-Education-Dept
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய