
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ(M.E).,எம்.டெக்(M.Tech)., மற்றும் எம்.ஆர்க்(M.Arch).,உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட்(GATE) என்ற நுழைவுத் தேர்வானது நடத்தப்படுகிறது.
2020 -2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கேட் நுழைவுத் தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் 5, 6, 7, 12, 13, 14 ஆகிய தேதிகளில் 27 பாடப் பிரிவுகளில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வு கணினி மூலம் நடைபெற்றது .இத்தேர்வை மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் நடத்தியது .
இந்நிலையில் இத்தேர்விற்கான ஆரம்பக்கட்ட விடைத்தாள் சமீபத்தில் வெளியாகி உள்ளது .இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அல்லது மாற்றுக் கருத்துகள் இருந்தால் மாணவர்கள் மும்பை ஐஐடியிடம் தெரிவிக்கலாம்.எனினும், ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் கட்டணமாகச் ரூ.500-ஐ செலுத்த வேண்டும்.மேலும் ஆரம்ப கட்ட விடைத்தாள்களைப் பெற https://gate.iitb.ac.in/qp2021.php என்ற இணையாத தொடரை அணுகவும்.
gate தேர்வின் இறுதிக்கட்ட முடிவுகள் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் விவரங்களைப் பெற https://gate.iitb.ac.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் .