பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு..

பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை ,ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்று பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொரோனா 3-வது அலை : கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே அமையும்..

Sat Sep 18 , 2021
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கொரோனா பணிக்குழு தலைவர் டாகடர் என்.கே.அரோரா கூறுகையில், ‘வருகிற நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடு தோன்றாத சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-வது அலை அமையும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது வரவிருக்கும் பண்டிகை காலம் […]
corona-3rd-wave-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய