தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் – தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனாவின் பெருந்தொற்று நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது .தமிழகத்திலும் கொரோனாவின் வேகம் அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது,எனினும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருந்தது.

எனவே ,தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..

*தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

• உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி

• காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

• அழகு நிலையம், முடி திருத்தும் நிலையங்கள் இயங்காது.

மேலும் அறிய ..தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு எதற்கெல்லாம் தடை மற்றும் அனுமதி

Next Post

கோவின் இணையதளத்தில் 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகம் - மத்திய சுகாதார அமைச்சகம்

Sat May 8 , 2021
கோவின் செயலியில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்ணை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கோவின் இணையதளமானது ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கு முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும். ஆனால்,கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போடச் செல்லாதவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளது.தடுப்பூசி போடப்பட்டதாக தவறான தகவல் பதிவு செய்வதை தடுப்பதறக்காகவே மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 […]
Covin-App-for-corona-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய