ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் – பள்ளி கல்வித்துறை உத்தரவு..

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கைப் பணிகளை அரசு அறிவித்துள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி மாணவர சேர்க்கை பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பெருமக்களும் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Post

பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6 முதல் தொடக்கம் ..

Fri Jul 30 , 2021
தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு மொத்தம் 5 தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதன் காரணமாக பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு கடந்த ஜூலை 19 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.வெளியிடப்பட்ட […]
plus-2-reexam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய