
உலகம் முழுவதும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இதில் குறிப்பாக டெல்டா வகை கொரோனா முக்கிய பங்கு வகிக்கிறது.நடப்பாண்டில் மற்றுமொரு கொரோனா வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளதாக பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஆல்பா, டெல்டா வகை வைரஸ்கள் மரபியல் மாற்றம் அடைந்து வரும் நிலையில் ,இந்த வகை கொரோனா வைரஸானது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவால் விடுத்துவருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் மழைக் காலத்தில் மற்றுமொரு புதிய வகை வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளது என பிரான்ஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
புதிய வகை கொரோனா குறித்து பிரான்ஸ் நிபுணர்கள் கூறுகையில், புதிய வகை கொரோனா ஏற்படுத்தவுள்ள விளைவுகளை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் மரபியல் மாற்றம் அடைவதற்கு அதற்கு ஒப்பீட்டளவில் குறைந்த திறனே உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
எதிர்காலத்தில் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தம்மை காத்துக்கொள்ள நாம் அனைவரும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது முகக்கவசம் அணிவது போன்றவற்றை மீ்ண்டும் பின்பற்ற வேண்டும். மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் 2022 அல்லது 2023 -க்குள் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.