மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கு அனைவருக்கும் இலவச தடுப்பூசி – தமிழக அரசு

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுதும் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி,தமிழகத்தில்18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18முதல் 45 வயது வரை உள்ளஅனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள்,கடை வியாபாரிகள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக வழங்க, சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 1 முதல் 18 முதல் 45 வயதினருக்கு தடுப்பசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது 45 வயது முதல் 59 வயது வரை 13 சதவீதமும், 60 வயதுக்கு மேல் 19 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில்,கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவே ,அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வரும் 28ம் தேதி முதல் கோவின் செயலி மற்றும் ஆரோக்கிய சேது செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Post

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் - நாசாவின் புதிய சாதனை

Fri Apr 23 , 2021
செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா பெர்சிவரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது. சுமார் 293 மில்லியன் மைல்கள் என்ற மிக நீண்ட பயணத்தை கடந்து செவ்வாய்க்கிரகத்தில் உள்ள ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) கடந்த பிப்ரவரி 18-ம் தேதி பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கியது.இந்த நிலையில், நாசாவின் ரோவர் செவ்வாய் வளிமண்டலத்திலிருந்து சில கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது. முதன் முறையாக […]
persevarence-rover-making-oxygen
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய