இலவச ‘நீட்’ பயிற்சியை மீண்டும் துவங்க, பள்ளிகளுக்கு உத்தரவு – பள்ளி கல்வித் துறை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 5 ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 25ம் தேதி முதல் மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வகையில் மாநில அரசு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் இடத்தை ஒதுக்கியுள்ளது.

மேலும் மருத்துவ ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச நீட் பயிற்சி ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதால்,வரும், 25ம் தேதி முதல், மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கான அறிவிப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் ஒரு நாளில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

Thu Apr 22 , 2021
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.44 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை […]
corona-test-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய