
கோவின் செயலியில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்ணை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கோவின் இணையதளமானது ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கு முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும்.
ஆனால்,கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போடச் செல்லாதவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளது.தடுப்பூசி போடப்பட்டதாக தவறான தகவல் பதிவு செய்வதை தடுப்பதறக்காகவே மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 இலக்க பாதுகாப்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம்,தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு அந்த 4 இலக்க எண் வழங்கப்படும்.அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, அந்த 4 இலக்க எண் கேட்கப்படும். இந்த எண் கோவின் இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டு, தவறான தகவல் பதிவு செய்வது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.