
பஞ்சாப், ஹரியானா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர் .விவசாயிகளின் போராட்டமானது நாளுக்கு நாள் வலுக்கிறது .இதனிடையே மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன .பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் .
விவசாயிகளின் போராட்டம் :
வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராடி வருகின்றனர் .கடந்த செப்டம்பர் மாதம் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்தார் .இந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய, இந்த சட்டத்தால் தனியாருக்கு பயன் அளிப்பதாக இருக்குமே தவிர, குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் விவசாயிகள் தான் சிரமத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள் என்னென்ன ?
1 .வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020
2 .விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020
3 .அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020
ஏ.பி.எம்.சி. என்றால் என்ன ?
ஏ.பி.எம்.சி. என்பது வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிகள் (ஏ.பி.எம்.சி.) ஆகும் .இது பல்வேறு மாநிலங்களில், அவர்களின் மாநில சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டன.இதன் முக்கிய நோக்கமானது. விவசாயிகள் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள் மூலம், ஓர் இடத்தில் தங்கள் விளைபொருள்களை வாங்கவும், விற்கவும் வசதி ஏற்படுத்துவதாக இவை உள்ளன.மகாராஷ்டிராவில் இதுபோல 300 கமிட்டிகள் உள்ளன.2006 ஆம் ஆண்டில் பிகார் மாநிலம் தனது ஏ.பி.எம்.சி. சட்டத்தை ரத்து செய்தது.
ஏ.பி.எம்.சி.கள் புதிய வேளாண் பொருளாதாரத்தை உருவாக்க உதவியாக இருக்கின்றன .தற்போது வழக்கத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட்களுக்குப் பதிலாக, புதிய தனியார் ஏற்பாடு செய்யப்பட்டால் விவசாயிகள், நுகர்வோர் என இரு தரப்பாரும் பயன்பெறுவார்கள் என்று அரசு கூறுகிறது.அனால் விவஸ்யிகள் இதனை ஏற்க மறுக்கின்றனர் ,இதனால் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பலனடையும் என விவசாயிகள் கூறுகின்றனர் .
எம்.எஸ்.பி. என்றல் என்ன ?
எம்.எஸ்.பி என்பது குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) ஆகும் .இது முக்கியமாக விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது.குறிப்பிட்ட ஒரு வேளாண் விளைபொருளுக்கு நாடு முழுக்க ஒரே எம்.எஸ்.பி. அமலில் இருக்கும். வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் கமிஷன் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் எம்.எஸ்.பி. விலையை வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்கிறது.
தற்போது 23 வேளாண் விளைபொருள்களை எம்.எஸ்.பி. விலையில் அரசு கொள்முதல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆனால்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டங்கள், ஏ.பி.எம்.சி.க்கு வெளியில் எந்த விலைக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க அனுமதி அளிக்கிறது. ஆனால், ஏ.பி.எம்.சி.யில் விற்றாலும் அல்லது வெளியில் விற்றாலும் எம்.எஸ்.பி. விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்கின்றனர்.