வேளாண் மசோதா சட்டம்-2020 !விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் என்னனென்ன ?

விவசாய மசோதா சட்டங்கள் -2020

1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020(Essential Commodities (Amendment) Act 2020) .,
2.விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)
3.விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (Essential Commodities (Amendment) Act 2020):

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் ,சேமித்து வைக்கவும் மற்றும் வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவும் இந்த சட்டம் முழு சுதந்திரம் அளிப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது .

உணவு சேமித்தல் மற்றும் விநியோகத்திற்கு தேவைப்படும் குளிர்பதனக் கிடங்குகளை கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்த சட்டம் மூலம் எளிதாக்கலாம் என இம்மசோதாவை ஆதரிப்போர்களின் கருத்தாகும் .


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டத்தை பொறுத்த வரை,மத்திய அரசானது இந்தியாவில் விளையும் விளைபொருட்களான வெங்காயம் ,பருப்பு வகைகள் மற்றும் கோதுமை போன்ற விளைபொருட்களின் விலை உயரும்போது ,அப்பொருட்களை சேமித்து வைக்கவும் விற்பனை செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது மத்திய அரசானது விதித்துள்ளது .இந்த கட்டுப்பாடுகள் உணவு பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பொருந்தததாகும் .

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation Act 2020):

இச்சட்டமானது விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மற்றும் எந்த இடத்திலும் வர்த்தகமும் ,வியாபாரமும் செய்ய வழி வகை செய்கிறது .இதனால் ,விவசாயிகளுக்கென மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை கூடத்திற்கு வெளியேயும் விளை பொருட்களை விற்க வழி வகை செய்கிறது .இதன் மூலம் விவசாயிகளுக்கு அவர்களுடைய உற்பத்தி விளைபொருட்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .

மற்ற மாநிலத்தை சார்ந்த வியாபாரிகள் ,இன்னொரு மாநிலத்திற்கு சென்று பொருட்களை வாங்கி செல்லலாம் என்பதால் ,அம்மாநிலத்தில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதால் ,அம்மாநில அரசால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது .

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020)

இச்சட்டத்தின் மூலமாக நேரடியாக விவசாயிகளுடன் மூன்றாவது நபர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என இச்சட்டம் வழி வகை செய்கிறது .இச்சட்டத்தின் மூலம் விவசாய கான்ட்ராக்ட்டர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .

விவசாயமானது இந்தியாவில் மாநில அரசின் கீழ் செயல்படுகிறது .இந்த மூன்று மசோதாக்களின் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் என எதிர்கட்சிகள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு எதிராக வைக்கின்றன .மேலும் இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் பெரிய விதை நிறுவனங்கள் ,கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள் மற்றும் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் ஆகியவற்றிக்கு சாதகமாக அமையும் .

பல மாநிலங்களில் வேளாண் மசோதா சட்டமானது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது .விவசாய ஒழுங்குமுறை கூடத்திற்கு வெளியே விவசாய விளை பொருட்களை விற்பனை செய்வது மேலும் மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்துயிருக்கிறது .

விவசாய ஒழுங்கு முறை கூடம் என்பது என்ன ?

விவசாய நலனுக்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டதே விவசாய ஒழுங்கு முறை கூடமாகும் .இது விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும் .1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வேளாண் விளை பொருட்களுக்கான சட்டஹே பிறப்பித்து ஒழுங்கு முறைக்கூடங்களை உருவாக்கியது .

தமிழ்நாட்டில் 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும் 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டுவருகின்றன.மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் விளை பொருட்கள் நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு போன்றவைகளாகும் .

விவசாயிகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு விவசாயம் செய்வதை சட்டமானது உறுதி செய்கிறது .கரும்பானது இந்த முறையில் தான் பயிரிடப்படுகிறது .கரும்பானது பயிரிடப்பட்டு ஆலைக்கு அனுப்பப்படுகிறது .ஆனால் ஆலைகள் விவசாயிகளுக்கு சரியான முறையில் பணத்தை தருவதில்லை,தாமதப்படுத்துவதாகவும் தெரிய வருகிறது .இந்த நிலையில் சிறிய விவசாயிகள் பெரிய நிறுவனத்துடன் போட்டிபோட முடியுமா அல்லது வழக்கு தான் தொடுக்க முடியுமா என ஆய்வாளர் டாக்டர் ஜெயரஞ்சன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் .

Next Post

முக்கிய கட்டுப்பாடுகளுடன் நவம்பர் 16 முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதி - கேரள அரசு ஒப்புதல்

Tue Sep 29 , 2020
கேரள அரசு வரும் 16 ஆம் தேதி முதல் கொரோன முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளுடன் ,சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது … ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும் ,எனவே பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ,ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும் அனுமதி அளிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது . வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது .ஐயப்ப […]
sabarimalai-temple
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய