
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5 :10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.இந்நிலையில்,ஜப்பானை சேர்ந்த அகிஹிகோ ஹோஷைட் என்பவரும், நாசா விண்வெளி வீரர்களான ஷேன் கிம்பரோ, கே. மேகன் மெக்ஆர்தர் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த அகிஹிகோ ஹோஷைட் உள்ளிட்ட 4 வீரர்கள் இந்த டிராகன் கேப்சூலில் பயணிக்கவுள்ளனர்.
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்கள். இவர்களின் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்பி வந்தனர்.இந்த பயணமானது நாசுவிற்கும் ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் பெரும் வெற்றியை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அடுத்த வெற்றி பயணத்தை நோக்கி 4 விண்வெளி வீரர்கள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த 4 விண்வெளி வீரர்களும் அடுத்த 6 மாதத்துக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.