
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 14-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக இணையம் மூலம் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என TRB அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.