
டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையின்படி , ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியானது ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது நடைபெற இருந்த எழுத்துத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.