
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.பான்-ஆதார் எண்ணை குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க தவறும் பட்சத்தில் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.நேற்றோடு (மார்ச் 31 ) பான்-ஆதார் எண்ணை இணைப்பதர்க்கான கால அவகாசம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதர்க்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்து துறை உத்தரவிட்டுள்ளது.