தமிழகத்தில் சட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு..

தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தற்போது பெறப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில் அக்டோபர் 6-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் வரும் 4ம் தேதி வரை நடைபெறும் என சட்டப் பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். மேலும் 9-ஆம் தேதி மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதை பெறும் மாணவர்கள் அக்.11 முதல் 13-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்புக்கு (M.Ed) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Mon Oct 4 , 2021
தமிழகத்தில் உள்ள 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும், முதுநிலை கல்வியியல் பட்டப் (எம்எட்) படிப்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது நடப்பாண்டில் எம்எட் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் 13ம் தேதி வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org ஆகிய இணைய தளங்களின் மூலம் பதிவு செய்யலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க […]
M.Ed-Admissions-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய