தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி உடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைகிறது.இந்நிலையில் ஊரடங்கு குறித்து இன்று தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம்.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
  • பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • திரையரங்குகள், நீச்சல், குளங்கள், அரசியல் கூட்டங்களுகு தடை நீடிக்கிறது.
  • மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் புதிதாக 44,111 பேருக்கு தொற்று உறுதி..

Sat Jul 3 , 2021
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,05,02,362 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று […]
covid19-vaccination
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய