
கலை ,அறிவியல் மற்றும் அனைத்து உயர்க்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் நுழைவுத்தேர்வு இந்தாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் மற்றும் அனைத்து உயிர் கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.
தற்போது வரை எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் ,நடப்பு கல்வியாண்டு முதல் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் புதிய கல்விக் கொள்கையின் படி, கலை அறிவியல் போன்ற அனைத்து உயர்க்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.