
மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டமாகும் .
“இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் :
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து முறையான ஆலோசனைகளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ,மத்திய அரசு பொதுமக்களுக்காக ,அவர்கள் இருக்கும் இடத்தில இருந்தே சரியான ,தெளிவான மருத்துவ ஆலோசனைகளை கேட்டறிய கொண்டு வரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் ஆகும் .
இத்திட்டத்தின் மூலம் மக்கள் தங்களது ஆலோசனைகளை இணையதளம் மூலமாகவும் ,ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் தங்களது தொலைபேசி எண்களை பதிவு செய்து ,பின்னர் மருத்துவருடன் காணொளிமூலம் நேரடியாக ஆலோசனைகளை பெறலாம்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர் . இதில் அதிக ஆலோசனைகளை பெற்று தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் வகித்து வருகிறது .இதுவரை 3.43 லட்சம் அழைப்புகள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இதனை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலம் 3 லட்சம் அழைப்புகள் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளது .