
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.ஒரு பக்கம் கொரோனா அதிகரித்து வருவதும் ,மறுபக்கம் கொரோனவிற்கான எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டும் வருகிறது. கொரோனா எதிர்ப்பு மருந்திற்கு இந்தியாவில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே அவசர கால மருந்தாக டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற எதிர்ப்பு மருந்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) :
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பு மருந்திற்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவசரகால தடுப்பு மருந்தாக 2-டிஜி (2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ்) என்கிற தடுப்பு மருந்திற்கு மருத்துவக்குழு பரிந்துரைசெய்துள்ளது.இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) எதிர்ப்பு மருந்து கடுமையான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மிதமான முறையில் துணை சிகிச்சையாக வழங்கப்படுகிறது.இந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது மேலும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்க உதவுகிறது.
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) எதிர்ப்பு மருந்தை (ஹைதராபாத்தில் உள்ள) டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னணி ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) தயாரித்துள்ளது.
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்து குளுக்கோஸின் பொதுவான மூலக்கூறு மற்றும் அனலாக் என்பதால், இதை எளிதில் உற்பத்தி செய்து நாட்டில் ஏராளமாக கிடைக்கச் செய்யலாம்.இது பவுடர் வடிவில் உள்ளதால் இந்த மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம்.இந்த மருந்துமூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.