
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது.இதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதில், 9 முதல் 11 வகுப்பு மாணர்வர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக 9 முதல் 11 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
பிளஸ் 2 மாணவரக்ளுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி மூலம் அதிக பாடங்களை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்தமுறை ஏற்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் சேனல்கள் மூலம் நடைபெற்றது பெரிதும் பயனுள்ளதாக இருந்தது என பலரும் கருது தெரிவித்தனர்.
இதன்படி,தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீதமுள்ள பாடங்களை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினமும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் அதிக பாடங்களை விரைவில் முடிக்க கல்வித் தொலைக்காட்சி ஆசிரியர் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.