
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குழந்தைகளிடம் செரோ ஆய்வை எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வானது 5 மாநிலங்களில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டுள்ளது.
2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது.
இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அதிக அளவு பாதிக்காது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.