மருத்துவர் வி.சாந்தா அவர்களின் மறைவு : ஈடு செய்ய முடியாத பேரிழப்பு !!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரான ,மருத்துவர் சாந்தா அவர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவைகளால் மருத்துவத்துக்கும் ,மருத்துவத்துறையில் இருக்கும் அனைவருக்கும் சாந்தா அவர்கள் வழிகாட்டியாகவும் ,முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் .

உலக புகழ்ப்பெற்ற புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சாந்தா அவர்கள் ,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் வெறும் 10 படுக்கைகள் மற்றும் ஒரு கட்டடத்துடன் தொடங்கப்பட்ட அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து ,தனது தன்னலமற்ற சேவையை புரிந்து வந்தார் .இவர் தொடக்கத்தில் மூன்று ஆண்டுகள் சம்பளம் பெறாமலே தனது சேவையை ஆற்றி வந்தார் .மருத்துவர் சாந்தா அவர்களை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்து வந்தது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது .

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உலக தரத்திற்கு உயர்த்தி ,உலகம் அனைத்திலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் ,நடுத்தர மக்களுக்கும் மற்றும் அனைத்துதரப்பு மக்களுக்கும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான சிகிச்சையையும் அளித்து ,தனது தன்னிகரில்லா சேவையை வழங்கிய மருத்துவர் சாந்தா நம் அனைவரையும் விட்டு பிரிந்தது ,மருத்துவ துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது .

மருத்துவர் சாந்தா அவர்களின் மருத்துவ சேவைப் பணிகள் :

மருத்துவர் சாந்தா அவர்கள் ,அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிக்க தனது சேவையை ஆற்றி வந்தார் .

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை அன்போடு அரவனைத்து ,அவர்களுக்கு தகுந்த சிகிச்சையை அளித்து ,குணப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வை அளித்தவர் மருத்துவர் சாந்தா அவர்கள்.

உலக சுகாதார நிறுவனத்தில் “சுகாதார ஆலோசனை குழுவின் “உறுப்பினராக பணியாற்றினார்.உலக தரத்தில் ,நவீன வசதிகளை கொண்டு ஏழை ,எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சையை அளித்தார் .

மருத்துவர் சாந்தா அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என அடிக்கடி பரிசோதனை செய்யும் அவசியம் குறித்து மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியை மேற்கொண்டார் .

அடையாறு புற்றுநோய் சிகிச்சையின் உன்னதமான சேவையை போற்றும் வகையில் ,தமிழ்நாடு அரசு இம்ம்மருத்துவமனைக்கு பல்வேறு உதவிகளை வழங்கி ,மாநில அளவில் புற்று நோய் சிகிச்சைக்கான தலைமை மையமாகவும் அறிவித்துள்ளது .

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்காகவும் மற்றும் சிகிச்சைக்காகவும் உலக புகழ்பெற்றவர் மருத்துவர் சாந்தா ,இவரின் தன்னலமற்ற சேவைக்காக பல விருதுகள் இவரை தேடி வந்தன.இவரின் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலக புகழ் பெற்ற விருதான மகசேசே விருது மற்றும் மத்திய அரசின் விருதான பத்ம பூஷன் ,பத்ம விபூஷண் ,பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கப்பட்டது .

மருத்துவர் சாந்தா அவர்களுக்கு ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2013 ஆம் ஆண்டு ஔவையார் விருது வழங்கி சிறப்பித்தார்.

மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு ஆனது ,மருத்துவத்துறைக்கும் மக்களுக்கும் பெரும் இழப்பாகும் ,இவருடைய தன்னலமற்ற சேவையானது ஈடு இணையில்லாதது ஆகும் .இவரின் பிரிவை இழந்து வாடும் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கும் ,மருத்துவர்களுக்கும் tamil.aptinfo.in சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் ,அவரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் .

Next Post

நினைவாற்றலை அதிகரிக்கும் திப்பிலி வல்லாரைக்கீரை சூரணம் ...

Wed Jan 20 , 2021
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு உணவு பழக்க வழக்கத்தினால் உடல் ஆற்றலையும் ,மன ஆற்றலையும் இழந்து வருகிறோம் .நவீன உணவு பழக்கத்தினால் இயற்கையாக கிடைக்கும் அறிய உணவு பொருட்களை நம் சிறிதளவு கூட சேர்ப்பது இல்லை .இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறிகளையும் ,கீரை வகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டாலே நோயற்ற உடலையும் ,மன வலிமையையும் பெறலாம் .நினைவாற்றல் என்பது நமக்கு ஒரு அறிய வகை சக்தியாகும் ,இதனை அதிகரிக்க நம் பல்வேறு முயற்சிகளை […]
vallarai-keerai
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய