இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மாறுபட்ட கொரோனா வைரஸ் – ‘டெல்டா பிளஸ்’ ..

இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா வைரஸ், கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மருத்துவர் வி.கே. பால் அவர்கள் கூறியுள்ளார்.

‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோனா வைரஸ் வகை கண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)). இது கவலையளிக்கக் கூடியதாக Variant of Concern (VoC). இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. மேலும் இவை கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மை பற்றி விரிவாக தெரியவில்லை . இந்த மாறுபட்ட வகை கொரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது. இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கோவிட் கூட்டமைப்பு (இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும். இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின் எதிர்காலப் பணி. இந்த அமைப்பு இதனைத் தொடர்ச்சியாக கண்காணித்து ஆய்வு செய்யும்.

இந்த மாறுபட்ட கொரோனவை , நாம் எந்த ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதில் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் விதிமுறைகளும் அடங்கியுள்ளன.இவற்றை நாம் முறையாக பின்பற்றுதல் வேண்டும்.

கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கொரோனவையும் நம்மால் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகை மாறுபட்ட கொரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார்.

Next Post

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.எஸ்.சி. வகுப்புகள் ஜூலை 1 முதல் தொடக்கம்..

Wed Jun 16 , 2021
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் முதல், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பி.எஸ்.சி. துணை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி (ஜூலை) வகுப்புகள் தொடங்க உள்ளன. எம்.பி.பி.எஸ். 2.ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக செலுத்திக்கொள்ள […]
Jipmer-medical-research-hospital
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய