
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 18,66,660 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,80,426 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.
