தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது .தொடர்ந்து தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்த நிலையில் ,இன்றைய பாதிப்பானது 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,564, ஈரோட்டில் 1,646, சென்னையில் 1,530 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 463 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.
