தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 378 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி காலை 6 மணியோடு முடிவடையும் நிலையில் , மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 21-ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட […]