தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணியளவில் முடிவடையும் நிலையில் ,தற்போது தொற்று குறைவாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,663 பேருக்கும், சென்னையில் 1,789 பேருக்கும், ஈரோட்டில் 1,569 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த 443 பேர் பலியாகியுள்ளனர்.
