புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் படிப்பு படியாக குறையத் தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு ‘டெல்டா’ என்று அழைக்கப்படுகிறது.இந்த கொரோனா வைரஸ் ஆனது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவி உள்ளது என்றும், இதற்கு ‘லாம்ப்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“லாம்ப்டா” என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது என்றும், குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உருமாற்றம் அடைந்த “லாம்ப்டா” என்ற புதிய வகை வைரசின் தாக்கம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Jun 19 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,014, ஈரோட்டில் 933, சேலம் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 468 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 180 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
district-wise-active-cases-in-tamilnadu-19-6-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய