அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்டம்பர் 15 வரை நேரடி மாணவா் சோ்க்கை..

சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், செப்.15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்டத்தின் கிண்டி தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி மகளிா், திருவான்மியூா், வடசென்னை, ஆா்.கே.நகா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதர்க்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி பெற்று சேரும் மாணவா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 என பல சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : புதிதாக 42,909 பேருக்கு தொற்று..

Mon Aug 30 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோன தொற்று தொடர்ந்து 3வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக உறுதி செய்யப்படுவது பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 42,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.27 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு […]
coronavirus-vaccine-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய