
தினேஷ் கார்த்திக் கே கே ஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தன்னை விலகிக்கொண்டார் .அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் (கேகேஆர்) கேப்டனாக இருந்தார் .இந்நிலையில் அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆன இயான் மோர்கன் கேப்டனாக இருப்பார் என கே கே ஆர் நிர்வாகம் அறிவித்துள்ளது .
கே கே ஆர் தலைமை செயல் இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கி அவர்கள் கூறுகையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தும் வேண்டும் என்ற வகையில் மட்டுமே கேப்டன் பதவியை மற்ற ஒருவருக்கு வழங்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மட்டுமே வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது .கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை அவ்வளவு எளிதாக யாரும் எடுக்க மாட்டார்கள். அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தினேஷ் கார்த்திக் போன்றோரால்தான் இது சாத்தியம் என்று நிர்வாக இயக்குநர் வெங்கி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி ஐந்தாவது இடத்தில் இடம்பிடித்தது.தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டனாக 2018ஆம் ஆண்டு தொடருக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார் .அதற்கு முன் அந்த அணியின் கேப்டன் ஆக கெளதம் காம்பீர், டேர் டெவில்ஸ் இருந்தனர் .