
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் (Ziva)ஸிவாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததது பெரும் அதிர்ச்சியயை உண்டாகியுள்ளது . குஜராத் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் இத்தகைய மோசமான, அருவருக்கத்தக்க மிரட்டலை விடுத்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது .
தோனியின் மனைவியான சாக்ஷி யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தோனியின் மகளுக்கு எதிராக மிகவும் மோசமான நிலையில் மிரட்டல் ஒன்றை விடுத்தான் .இதை அறிந்த தோனியின் மனைவி சாக்ஷி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள காவல்துறையிடம் புகார் அளித்தார்.
ஜார்கண்ட் காவல்துறை புகாரை ஏற்று கொண்டு அந்த சிறுவனின் மீது நடவடிக்கை எடுத்தனர்.இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட மிரட்டல் பதிவு ஆனது தான் வெளியிட்டதாக அந்த சிறுவன் ஒப்புக்கொண்டார் . இதனை அடுத்து ஜார்கண்ட் காவல்துறை அந்தச்சிறுவனை கைது செய்தது .
பொதுவாக விளையாட்டு வீரர்களை சமூக வலை தளங்களில் கேலிசெய்வதும் ,கிண்டல் அடிப்பதும் ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது .இது ஒரு சில சமயங்களில் எல்லை தாண்டி விளையாட்டு வீரர்களின் குடும்பத்தை தாக்கும் அபாயமும் ஏற்படுவது உண்டு .இது போன்ற அத்துமீறல்களுக்கு எந்த வித நடவடிக்கையும் ஏற்படுவதில்லை .
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பிறகு இச்சிறுவன் இப்பதிவை வெளியிட்டிருக்கிறான்..