
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கொரோனா பணிக்குழு தலைவர் டாகடர் என்.கே.அரோரா கூறுகையில், ‘வருகிற நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடு தோன்றாத சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-வது அலை அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பெரிய கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியவைதான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.