தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு..

தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த டெல்டா வைரஸ் ஆகும் .இது தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் ஆக உருமாறியுள்ளது.

நாடு முழுவதும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது.மேலும் தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.

Next Post

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் - கால அட்டவணை வெளியீடு ..

Wed Jun 23 , 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும் ,ரத்துசெய்யப்பட்டும் உள்ளன.இந்நிலையில் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சி மூலம் எந்தெந்த நேரத்தில்,எந்தெந்த பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று மாணவர்கள் தெரிந்துகொள்ள கால அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அறிய https://www.kalvitholaikaatchi.com/ என்ற இணையதளத்தை அணுகவும்..
education-tv-time-table-class1-to-12th-class
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய