நாடு முழுவதும் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா : மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கொரோனா தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,505, தமிழ்நாட்டில் 1,929, கர்நாடகாவில் 1,186, ஆந்திராவில் 1,413, அசாமில் 1,120 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 86 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில், 34 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்படும் மரபணு மாற்றங்களைக் கண்காணிக்கும் பணியில் நாட்டில் 28 ஆய்வகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Tue Aug 10 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 20,363 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 224 பேருக்கும், […]
district-wise-corona-updates-10-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய