டெல்டா மரபணு மாற்ற வைரஸ் : மிக ஆபத்தை விளைவிக்கும் வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தீவிரம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளில் தீவிரமடையத் தொடங்கியது.உலக சுகாதார நிறுவனம் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதன் மாறுதல் மற்றும் தீவிரத்திற்கு ஏற்ப பெயர்களை சூட்டி வந்தது.

இதில் குறிப்பாக இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பி.1.617 முதன் முறையாக கண்டறியப்பட்டது.பின்னர் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பி.1.617.1 மற்றும் பி.1.617.2 என்ற இரண்டு ரகங்களாக பிரிக்கப்பட்டது.இவற்றில் பி.1.617.1 ரகத்திற்கு உலக சுகாதார அமைப்பு கப்பா என்ற பெயரையும், பி.1.617.2 ரகத்திற்கு டெல்டா என்ற பெயரையும் சூட்டியுள்ளது.

இந்தியாவில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் மற்ற ரக வைரஸ்களை காட்டிலும் மிக தீவர பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்

இந்தியாவில் பரவி வரும் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு இருந்த அறிகுறிகளுடன், காது கேளாமை, தீவிர வயிற்றுக் கோளாறுகள், உறுப்புகள் சிதையும் அளவுக்கான ரத்தம் உறைதல் ஆகிய புதிய விளைவுகளும் தோன்றுவதாக மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.

இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் ஆனது,பிரிட்டனில் காணப்பட்ட ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட 50 சதவீதம் அதிக தொற்றும் ,திறனும் உடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா, காமா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றால் ஆபத்தான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஆன்லைன் மூலம் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

Tue Jun 8 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டும் ,மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது.இந்நிலையில் சமீபத்தில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தாத பள்ளிகளில் ஆன்லைனிலேயே தேர்வை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது .மேலும்,தேர்வை நடத்தி அதற்கான மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய […]
CBSE-Board-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய