
டீப் நோஸ்டால்ஜியா(Deep Nostalgia) செயலியானது வரலாற்று புகைப்படங்கள் மற்றும் பழைய புகைப்படங்களின் முகங்களுக்கு உயிரூட்டவும் ,உயர்தர வீடியோ காட்சி அமைப்புகளை உருவாக்கவும் பயன்படுகிறது .மேலும் இதில் கேளிக்கை விளம்பரங்களை (memes) உருவாக்கும் வசதியும் உள்ளது .
மைஹெரிட்டேஜ் நிறுவனமானது பழைய புகைப்படங்களை மறுசீரமைக்கும் ‘டி-ஐடி’ அனிமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமை செய்வதற்கான தொழில்நுட்ப உரிமத்தை பெற்றுள்ளது .
டீப் நோஸ்டால்ஜியா (Deep Nostalgia) நுண்ணறிவு செயலி மூலம் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ,அதனை ஒரு குறுகிய வீடியோவாக மாற்றம் செய்து அனைவருக்கும் பகிரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . டீப் நோஸ்டால்ஜியா (Deep Nostalgia) நுண்ணறிவு செயலியை மைஹெரிட்டேஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது .இந்த செயலியானது தற்போது ஊடக மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.