இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,32,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,85,74,350 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,713 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,97,655 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,702 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,07,071 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக 16,35,993 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 22,41,09,448 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

கொரோனா நோயாளிகளை தாக்கும் தோல் பூஞ்சை நோய்..

Fri Jun 4 , 2021
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும்பாதிப்பை ஏற்படுத்திய நிலையில்,கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் பூஞ்சை நோய் தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புப் பூஞ்சை நோயால் […]
ear-affected-in-skin-infections
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய