இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 2,22,315 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் , உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.நாடு முழுவதும் இதுவரை 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,22,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,52,447 ஆக உள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,454 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,28,011 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,03,720 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 27,20,716 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 19,60,51,962 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஜூன் 14 முதல் ஆன்லைன் மூலம் தொடக்கம்..

Mon May 24 , 2021
அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருவதால், மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து தேர்வு நடத்துவது என்பது கடினமான காரியம் என்பதால், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா […]
anna-university-exam-schedule-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய