இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 2.63 லட்சம் பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,63,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,52,28,996 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,15,96,512 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,719 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 33,53,765 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 18,44,53,149 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறு தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம்..

Tue May 18 , 2021
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான மறுதேர்வு நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக செய்து வருகிறது. மறு தேர்வானது அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வானது நத்தப்பட்டது.சின்ஹா தேர்வில் 4.25 லட்சம் மாணவர்கள் பங்குப்பெற்று தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களில் 2.3 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன.இதில் 1.1 […]
Anna-universiy-Re-Exam-june-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய