இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 22,431 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 22,431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,49,856 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,00,258 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 24,602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,46,687 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 59,48,360 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 92 கோடியே 17 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

டிஎன்பிஎஸ்சி 102 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..

Thu Oct 7 , 2021
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director, Child Development Project Officer (CDPO) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. TNPSC தேர்வாணையம் மூலமாக 102 காலிப்பணியிடங்கள் கொண்ட Assistant Director, Child Development Project Officer (CDPO) பணிகளுக்கு முன்னதாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட வாய்மொழித் தேர்வுகள் 11.08.2021 அன்று நடத்தப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான […]
Tnpsc-exam-result-announced-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய