இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரமாக குறைவு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,09,07,282 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,020 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,00,63,720 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,784 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 49,007 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,31,315 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 38,14,67,646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இன்று முதல் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..

Tue Jul 13 , 2021
நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்திருந்தார்.மேலும் இன்று மாலை 5 மணி முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வானது முன்னதாக 155 நகரங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில் , தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான […]
NEET-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய